பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 'கோடிக் கணக்கில் பொருள் குவித்து இவர்கள் குபேரர்கள் ஆகிவிட்டனர்; எங்கிருந்தோ கற்களை வரவழைத்துச் சுவர்களை எழுப்பிவைத்து அழகு மாளிகைகளைக் கட்டிக் குவித்துள்ளனர். இடிபொறிகள் கொண்டு வந்து அவற்றை இடித்துத் தள்ள வேண்டும்; அதற்கு வழி என்ன" என்று துரியன் பேச்சுத் தொடங்கினான். அண்ணன் எடுத்த உரையை விரித்து உரைக்க அவன் தம்பி துச்சாதனன் குறட்பா ஒன்றை எடுத்துக் கூறினான்; சாத்தான் வேதம் ஒதியது. "இளைதாக முள்மரம் களைக காழ்த்த இடத்துப் பகையை வெல்ல இயலாது; அது களையுநர் கைகளை வருத்தும்' என்றான்.