பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 'அந்த விழாவில் அவர்கள் யாரை மதித்தார்கள்? இடையன் அவன் கடையன் அந்த மடையர்கள் அவனுக்குத் தலைமை தந்தார்கள் கேள்வி கேட்ட வேள் சிசுபாலன் அவன் சிரசைக் கொய்து விரசமாக நடந்து கொண்டனர்' என்று அவன் வழிமொழிதலை முடித்தான். 'போரிட்டு அவர்களை வேருடன் களைவது தக்கதுதான்; அதுநமக்கு இயலாது. அது நம் இரத்தத்தில் இல்லை; அது வாய்ப்பேச்சு: வழி வேறு உண்டா? அது இழிவு என்றாலும் ஏற்கத் தக்கது' என்றான் துரியன். முந்திரிக் கொட்டை போல முனைந்து எழுந்தான் துரியன் நண்பன் சூரியா. 'போர் அதுதான் வீரர்க்கு அழகு தளபதி யான் ஒருவனே அவர்களைத் தவிடு பொடி ஆக்குவேன்;