பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சூழ்ச்சி, சூது, வாது இவை கத்தி முனைகள்; சூது ஆட்டம், கழைக் கூத்தாடிகள் வித்தை விழுந்தால் படுபாதாளம்: அது நிலைக்காது' என்றான். ஆசை தீர அவனைப் பேசவிட்டு அவன் ஆணவப் பேச்சுக்கு இடம் கொடுத்தான் சூழ்ச்சி மிக்க சகுனி, 'மாற்றான் வலியும், அவர்தம் ஆற்றலும், தம் வலியும், சாதித்த சாதனையும், சீர்தூக்கிப் பேசுவதே சிறப்புத் தரும்: இதுவரை நாம் பெற்ற மதிப்பெண்கள் யாவை? தோற்றுப் புறங்காட்டிய பின்னடைவுகள் எத்தனை? சாதித்த சாதனை யாது? எல்லாம் எதிர்மறைக் கணக்குகளே தோல்விதான்;