பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 மோது போர் என்பது எல்லாம் சல்லி விளையாட்டு; குருதி ஆறு ஒடும்: செத்தவர் கணக்கு நாளுக்கு நாள் கூடும் வெற்றி அடைந்தபின் திரும்பிப் பார்த்தால் தெரியும் இழப்புகள். செத்தவருக்குச் சமாதி எழுப்பி வீர வணக்கம் செய்யலாம்; வீண் செலவு: இடம் அடைப்பு விவேகம் அன்று; கத்தியைத் தீட்டுவதை விட புத்தியைத் தீட்ட வேண்டும்; அதுதான் வெற்றிக்கு வழி' என்றான். அறிஞர் யாரோ கூறிய பேச்சை இந்தக் கயவன் சகுனி பயன்படுத்தினான். எந்த அறிவுரையும் ஏற்றத்துக்கும் பயன்படும்; அழிவுக்கும் ஆக்கப்படும். 'அரசர்கள் ஆமோதித்த நளன்கதை: அது நமக்கு முன்மாதிரி;