பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 இழப்புக் கண்ணுக்குப் புலப்படாது; கத்தியின்றி ரத்தமின்றிச் செய்யப்படும் யுத்தம் இது: ஒரு சொட்டு இரத்தம் சிந்தாத போர் இது; கண்ணீர் சிந்தலாம்; அது விரைவில் ஆறிவிடும். மகிழ்வுக் களங்கள் பல; அங்கு அவர்கள் என்ன செய்கிறார்கள்? சீட்டு ஆடுகிறார்கள்; சீர் அழிகிறார்கள். பாண்டவர்கள் படித்தவர்கள் நீதி நெறிகள் போதித்த தருமநெறிகள் இவற்றை நெகிழாத நல்லவர்கள்; ஆட்டத்தில் அவர்கள் நேர்மை கடைப்பிடிப்பர்; அது அவர்களுக்குத் தோல்வி தரும்; சீர்மை குலைந்த குறுக்கு வழிகள் அவர்களுக்கு அறிமுகம் ஆகியது இல்லை. நாம் நீதி நெறிகள் பயிலாதவர்கள்; வஞ்சனையைப் பஞ்சணையாகக் கொண்டவர்கள்;