பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 அவர்களை விஞ்ச முடியும்' என்று நஞ்சனைய வார்த்தைகளை வெளியிட்டான். அடிப்படைக் கொள்கை ஒப்புக் கொள்ளப்பட்டது. செயல் திட்டம் குறித்துச் சிந்தனை செய்தனர். 'மண்டபம் ஒன்று கட்டு: அதன் மாண் அழகைக் காண ஆள் விட்டு அழை: அவர்கள் வர மறுக்க அவர்களால் இயலாது. வந்தபின் அவர்களை வளைத்துப் போட வாகான வார்த்தைகள் நம்பால் உள்ளன" என்று தொடர்ந்து பாங்காகப் பேசினான். விதுரன் எதிர்த்துப் பேசினான்; அவன் நடுநிலைமை கெடாதவன். 'வேட்கை பெரிது என்றால் கேட்கை அது போதும்; அவர்கள் பொருள் கொட்டித் தருவார்கள் கேட்டுப் பெறுவீர்' என்றான்.