பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 அழகும், வெற்றியும், தத்தம் குடியும், மானமும், செல்வமும், பெருமையும், குலமும், ஒளியும், நல்லொழுக்கமும், புகழும், பயின்ற கல்வியும் இவை அனைத்தும் தொலையும், மடியும்' என்று தீமைகளைக் கூறினான். தருமன் தருமம் அறிந்தவன்; அவனுக்கு இவை கூறுவது மிகை; என்றாலும் அவற்றை அமைதியாகக் கேட்டான். "அவர்கள் திட்டம் எது? அது இப்பொழுது நம் சிந்தனைக்குத் தேவை இல்லை. அழைப்பு அதை நாம் மதிப்பது கடமை; அவர்கள் நம் சகோதரர்கள்' என்று பாசம் பேசினான். 'மற்றும் தந்தை பெரியவர்; திருதராட்டிரர் அழைப்பு: அதனை மறுப்பது