பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 செல்வமும் பாசமும் மிக்க மாமி, மாமன்; மைத்துனர்கள்; சிறப்பாகக் காந்தாரியைக் காண அப்பொழுது விழைந்தாள். காந்தாரியின் பெருமை பார் எங்கும் பேசப்பட்டது: கணவன் கண் இழந்தான் என்பதால் அவளும் தன் கண்ணுக்கு இருட்டைத் தேடிக் கொண்டவள்; முரட்டுத் துணியால் கண்ணைக் கட்டி மூடிக் கொண்டவள். பிள்ளைகள் நிறைய பெற்றவள், தாய்மை முற்றிக் கனிவு நிரம்பியவள். அதனால் அவள் ஆசி பெற அவாவிச் சென்றனள். குருட்டுத் தந்தை; கள்ளச் சிந்தையன், அவர்களை அன்புடன் உபசரித்துத் தழுவி நலம் விசாரித்து நன்மைகள் காட்டினான். 'வேள்வி நடந்தது: யான் வர இயலாமல்