பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 போயிற்று, மூப்பு அதுதான் யாப்பு' என்று வாய்ப்பு இழந்தமைக்கு அவன் வருத்தம் தெரிவித்தான். காந்தாரியை வணங்க திரெளபதி சென்றாள்; மாமியும் மருமகளும் கதைகள் பலபேசிக் கலந்து உரையாடினர். தருமன் மண்டபத்தைக் கண்டு வாயாரப் புகழ்ந்தான்; சிற்பத்தை வியந்தான்; திட்டமிட்டுக் கட்டிய சீர்மையைப் பாராட்டினான். 'இதற்கு நிகர் அளகையிலும் இல்லை' என்று வானளாவப் புகழ்ந்தான். வார்த்தைகள் பேசுவதற்குப் புதியவை கிடைக்கவில்லை; பரபரப்பு இல்லாத காலம். உண்டு இளைப்பாறி ஆசனங்களில் அமர்ந்து பாக்கு வெற்றிலை மடித்துத் தின்றுமென்று பொழுது கழித்தனர்.