பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 நாட்டு நிலவரங்கள், மழை வெள்ளங்கள், உலக அரசியல், தான தருமங்கள் இவற்றைப் பேசி முடித்தனர். கொலைகள், குற்றங்கள், வழக்குகள் இன்று பேசப்படுகின்றன. அன்று தரும சாத்திரங்கள், நீதிகள், நெறிகள் இவர்கள் பேச்சில் இடம் பெற்றன. காயை உருட்டிப் பலகையை விரித்தான்; அதன் புள்ளிகள் அவை கண்ணி வெடிகள். 'இதை உருட்டிக் கொண்டே இன்பப் பொழுது கழிக்கலாம்' என்று சகுனி தொடுத்தான். தருமன் எதிர்பார்த்தான் தற்காப்போடு பேசத் தொடங்கினான்; 'ஏன்? வேறு நல்ல விஷயங்கள் நாலாயிரம் இருக்கின்றன; இந்தச் சூது தீது' என்றான்.