பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவுந்தி-கதாப்ாத்திரம் 109 கும் வழித்துணையாவார் என்று கோவலன் கருதியிருப்பது தெரிய வருகிறது. மேலும் கவுந்தியடிகளே-மதுர்ைக்குச் செல்லும் வழிகளில் எந்த வழியாகச் சென்ருல் கண்ண கியை ஒத்த ஒரு மெல்லியலாளுக்குத் துன்பம் குறைவாக இருக்கும் என்பதையும் எடுத்துக் கூறுகிரு.ர். "ஐயோ! பிறந்த நாள் தொட்டுச் செல்வக் குடும்பத் திலேயே வளர்ந்த இக் கோவலனும் சுண்ணகியும் தனியே மதுரை செல்லும் வழியில் என்னென்ன துயர் எய்தப் போகிருர்களோ?'-என்றெண்ணித் தவிக்கத் தொடங்கி விட்ட காப்பியச் சுவைஞனுக்குக் கவுந்தியடிகள் உடன் துணையாகிருர் என்ற செய்தி கூறப்பட்டவுடன் ஒர் ஆறுத லும் நிம்மதியும் வந்து சேருகிறது. எதிர்பாராத விதத்தில் தற்செயலாகக் கவுந்தியடிகளை வழித்துணையாக நியமிப் பதன் மூலம் இளங்கோ அடிகள் இந்த விறு விறுப்பை உண்டாக்கி விடுகின்ருர். பின்பு சாரணர் வருகை, அறி வரை வணங்கி ஆசி பெறுதல் சாரணர் கோவலன் கண்ண கிக்கும் கவுந்தியடிகளுக்கும் ஆசிகூறி வான் வழிப் போவது ஆகிய நிகழ்ச்சிகள் இடம் பெறுவதன் மூலம் கோவலன் கண்ணகி வழிப்பயணம் பற்றிய காப்பியம் கற்பவனின் மனச்சுவையையும், அவல உணர்வையும் சிறிது நெகிழ்த்தி விடுகிருர் ஆசிரியர். கவுந்தியடிகள் வறுமொழியாளனையும் வம்பப் பரத்தையையும் சபிப்பதன் மூலம் தம்முடைய தவச் சிறப்பை நிரூபிக்கிருர் சாபவிடை தருவதற்கு வேண்டிக் கொள்வதன் மூலம் கோவலன் கண்ணகி தம் இரக்க குணத்தையும் அதற்கு இசைவதன் மூலம் கவுந்தி யடிகள் தமது பெருந்தன்மையையும் காட்டுகின்றனர். பின்பு மூவரும் உறையூரை அடைகின்றனர். காப்பிய ஆசிரியராகிய இளங்கோவடிகள் தாம் உல குக்கு உணர்த்தக் கருதிய அறிவுரைகள் பலவற்றைக் கவுந் தியடிகள் மூலமாக உணர்த்தவும் உரைக்கவும் முடிகிறது. கவுந்தியடிகள் என்ற பாத்திரத்தின் மூலம் இதைச் சாதித்