பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 நா. பார்த்தசாரதி மண்ணக மாதவியின் முன்ைேளான விண்ணகமாதவி ஆடரங்கில் செய்த பிழையையே இவளும் மீண்டும் செய் தாள். ஆகையால், இவள் வாழ்வும் அவள் தன் காதலனைப் பிரிந்து வாழ்ந்ததைப் போல் இறுதியில் துன்பம் நிறைந்த தாயிற்று. இதனை உள்ளுறை பொருளாக உணர்த்த வேண்டும் என்பது காப்பிய ஆசிரியர் இளங்கோவடிகளின் கருத்தாக இருக்கக் கூடும். . . “. . ஆடலாசிரியன் அமைதி - வேத்தியல், பொதுவியல் என்னும் இரண்டு கூத்துக் களின் இலக்கணங்களையும் தெரிந்தவகை ஆடலாசிரியன் இருக்க வேண்டும் என்று அரங்கேற்று காதை தெரிவிக் கின்றது. . "இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து' என இதனைத் தெரிவிப்பார் ஆசிரியர். இஃதன்றியும் பதினேராடலையும் பாட்டையும் கொட்டையும் பற்றிய இலக்கணங்களையெல்லாம் அவன் அறிந்திருக்க வேண்டும், அல்லிய முதல் கொடு கொட்டியீருக உள்ள பதினோருவகை ஆரியக் கூத்தையும் அவன் உணர்ந்திருக்க வேண்டும். - "கூடை செய்த கை வாரத்துக் களைதலும் . வாரஞ் செய்த கை கூடையிற் களைதலும் பிண்டி செய்த கை ஆடலிற் களைதலும் ஆடல் செய்த கை பிண்டியிற் களைதலும்' என்ற இன்ைேரன்ன அவிநயங்களையும் ஆடலாசிரியன் அறிந்திருக்க வேண்டும். . х இசையாசிரியன் அமைதி . ஆடலாசிரியன் அமைதி கூறப்பட்டது போலவே அடுத்து, நாடகத் தமிழுக்கு இன்றியமையாத இசையாசிரி யன் அமைதியும் அரங்கேற்று காதையுள் கூறப்பட்டுள் ளது. .