பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 கா. பார்த்தசாதி தில்லை, அயன் சதுர் முகங்களென ஆயின தில்லை என்றெல் லாம் அதன் எழில் போற்றப்படுகிறது. - பார்விளங்க வளர் நான்மறை நாதம் பயின்ற பண்புமிக வெண்கொடி ஆடும் சீர்விளங்கு மணி நாவொலி யாலும் திசைகள் நான்கெதிர்புறப்படலாலும் தார்விளங்கு வரைமார்பின் அயன்பொன் சதுர் முகங்களென ஆயின தில்லை தில்லை நகரைப் போலவே தில்லை நகரின் ஒர் பகுதியாகிய திருவீதியும் பரக்கப் பேசப்படுகிறது. பொங்கும் அன்பருவி கண்பொழி தொண்டர் போற்றி சைக்கும் ஒலி எங்கும் முழங்கும் திங்கள் தங்குசடை கங்கை முழங்கும் தேவ தேவர் புரியுந் திருவிதி: இப் புனிதத் திருத்தலமாம் தில்லையில்தான் எம்பெருமா னது திருநடத்தைக் கண்ணுரக் கண்டு களிக்கின்ருர் ஆரூரர். - - . 'ஐந்துபேரறிவும் கண்களே கொள்ள - அளப்பருங் கரணங்கள் நான்கும் . . . சிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும் திருந்துசாத் துவிகமே ஆக் இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்' கழுமலம் : - - தில்லைக்கு அடுத்தாற்போல் கழுமலம் என்னும் திருப் பதி தடுத்தாட் கொண்ட புராணத்துள் பேசப்படுகிறது. அறம் பயந்தாள் திருமுலைப்பால் அமுதுண்டு வளர்ந்தவர்"