பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 - நா. பார்த்தசாரதி கொண்டே போகிறது. பொருளற்ற முறையில் திறய்ைவு நூல்கள் வள்ர ஆரம்பிக்கின்றன. - . . . . இதுபோன்ற பல காரணங்களைச் சொல்லித் திறய்ைவு தேவையே இல்லை எனச் சிலர் வாதமிடுகின்றனர். இவ் வாதத்தில் ஒருபுறம் பொருளிருந்தாலும் இதன் மறுபுற மும் சிந்திக்கத் தக்கதாகும் - இன்றைய விஞ்ஞான யுகத்தில் காலம் மிகவும் குறுகிய தாய் இருக்கிறது. நேரத்தைப் பொன்னே போல்போற்ற வேண்டியதாய் உள்ளது. மிகவும் பெரிய புத்தகங்களைப் படிக்கக் கூடிய நேரமோ பொறுமையோ யாருக்கும் இருப் பதில்லை. - - மில்டனின் உம்பருலக நீக்கம் மிகப் பெரியதொரு நூலாகும். அதைப்படிக்காமலேயே இருப்பதைவிட அது பற்றிய திறய்ைவையாவது படிப்பது சிறந்ததல்லவா? பாரடைஸ் லாஸ்ட் என்கிற அந்தப் புகழ் பெற்ற நூலைப் பற்றிப் பலரும் பேசும்போது இன்றைய இளைஞர் கள் அதில் கலந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகின்ற னர். மூல நூலைப் படிக்க நேரமில்லாத அவர்கள் திறனப் வையேனும் படித்துப் பயன் பெறலாம் அல்லவா? ஒரு நூல் படிக்கப்படாமலே போவதைவிட, அந்த நூலின் கதையாவது படிக்கப்பட்டு மக்களிடையே வழங்கி வருதல் சிறப்பல்லவா? --- கம்பராமாயணம் என்கிற பல்லாயிரம் பாடல்கள் கொண்ட பழந்தமிழ்க் காப்பியத்தை இன்று படிப்பவர் கள் யார்? பண்டிதர்கள் மட்டுமே. - பாமரர் படித்து அறிய இயலாதவாறு அதன் தடை யும் பழந்தமிழில் அமைந்துள்ளது. - ஆயின் வ.வே.சு.ஐயரின் கம்பராமாயணம் பற்றிய புத்த கத்தை அனைவரும் எளிதாகப் படித்துப் புரிந்து கொள்ள முடியுமே? கம்பராமாயணத்தின் பொதுவான கதை