பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கா. பார்த்தசாரதி யையும் இவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியுமோ? கலைத் தன்மை பெரிதும் நீதிபோதனை சிறிதளவுமுள்ள ஒரு நூலை ஏற்றுக் கொள்வது போல நீதிபோதனையோ, நோக்கமோ அறவே இல்லாத ஒன்றையும் ஏற்க முடியுமா என்ருல் தயக்கமான விடையே கிடைக்கக்கூடும். நூறு சதவிகிதக் கலைத்தன்மை என்னும் பெயரில் நோக்கமோ, செய்தியோ (Message) நூற்பயனே, இல்லாத ஒன்றை நம் மக்கள் ஏற்பார்களா என்பது ஐயப்பாட்டுக்குரியதே. பிரசாரம் என்கிற அளவிற்கு இல்லாவிடினும் நூற் பயன் என்பது எதிர்பார்க்கப்படுவது இந்திய இயல்பில் வரும் ஒரு பழக்கமான மரபு. எந்தப் பயனும் இல்லாமல் ஒரு நூலோ அல்லது, ஒரு வாக்கியமோ எழுதுவதை “நின்று பயனின்மை'-என்ற குற்றமாகக் கூறுவது நம் நாட்டு வழக்கமாகும்.