பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமொழிகளின் தோற்றமும் வளர்ச்சியும் ஒரு நாட்டில் வழங்கும் பழமொழிகளையும் விடுகதை களையும் கொண்டே அந்நாட்டின் பண்பாட்டுச் சிறப்பை யும், வரலாற்றுப் பெருமையையும் கண்டறிந்துவிட முடி யும் என்பர் அறிஞர். நாட்டுப்புற இயலில் பழமொழி களின் பங்கும் விடுகதைகளின் பங்கும் தவிர்க்க முடியாதது ஆகும். பழமொழிகளின் மூலம் ஒரு நாட்டின் சமுதாய வாழ்க்கையை ஆராய முடியும் பழமொழிகளின் மூலம் அறிவுரைகளும் அறவுரைகளும் கிடைப்பதை ஆராய முடி யும். சாதி சமயப் பழக்க வழக்கங்கள், பெண்கள்தொடர் பான செய்திகள், வழக்காறுகள் இவற்றையும் பழமொழி கள் மூலமாக அறியலாம். பழமொழிகள் வாய்மொழி இலக்கிய வகையில் வளர்ந்த கலைச் செல்வமாகும். அவற் றின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பற்றி இங்கு ஒரு சில கருத்துக்களை இனிமேற் காணலாம். - தோற்றம் பழமொழி தோன்றிய காலத்தையும், இடத்தையும் ஆராய்வது என்பது மிகவும் அரிய செயலாகும் பெயரிலி. ருந்தே பழமை புலகை அது நிற்கிறது. விடுகதை, பழ மொழி, நாட்டுப்புறப் பாடல்கள், ஆகியவற்றில் காலங் காட்டும் பொருள்கள், கதைகள், வரலாற்றுக் குறிப்புக் கள் உள்ளவை தவிர ஏனையவற்றின் காலம் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதாகவே உள்ளது. எனினும் சில வரலாற்.