பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிங்கத்துப் பரணியில் பாலை நில வெம்மை கற்பனை நயத்திலும், வருணனத் திறத்திலும், வளம் மிக்க நிலப்பகுதிகளையும் அழகுணர்ச்சி சார்ந்த பிரதேசங் களேயும் பாடுவதில் எவராலும் சாதுரியத்தைக் காட்ட முடியும். ஆனல் வறண்ட நிலப்பகுதிகளையும், கவர்ச்சி யற்ற பிரதேசங்களையும், சிறப்பாக வருணித்துப்பாட ஒரு வரால் முடியும் எனின் அவர் இணையற்ற திறமை வாய்க் கப் பெற்றவராக இருந்தாலன்றி முடியாது. கவிச்சக்கரவர்த்தி ஜெயங் கொண்டாரோ பாலைநிலத் தைப்பற்றிக் கூடச் சிறப்புறப் பாடுகிருர். அழகுற வரு னிக்கிருர். ஒன்றுமில்லாப் பாழ் நிலமாகிய பாலையையே எல்லாக் கவிதையழகும் இணைந்துவரப் பாட முடிகிற அவர் புலமை நலம் வியத்தற்குரியது. வளங்கள் அழிந்து பட்ட நிலையே பாலை எனப்படுகிறது. அந்தப் பாலைக்கும் ஒரு பெரிய வளத்தைத் தம் திறமையால் அளிக்கிருர் ஜெயங்கொண்டார். அதுவே கவிதை வளம். கடை திறப்புப் பாடல்களிலோ, கோவிலைப் பாடும் பாடல் களிலோ. இராச பாரம்பரியத்தைச் சிறப்பிக்கும் பாடல் களிலோ ஜெயங்கொண்டார் திறமையைக் காட்டியிருப் பது இயல்பானது. பாலையைப் பாடுவதிலும் முன்னவற் றிற்குச் சற்றும் குறையாத திறமையைக் காட்டியிருப் பதோ அவருடைய தனிப்பெரும் சிறப்பினுக்குச் சான்ருக அமையவல்லது. அந்தப் பாலை பாடிய திறமையை இனிக்