பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிங்கத்துப்பரணியில் பாலைநில வெம்மை 55 பாலை நில வெம்மையை வருணிப்பதிலும் கற்பனை நயம்பட உரைப்பதிலும் திாழிசைக்குத் தாழிசை ஜெயங் கொண்டாரின் திறமையும் சாதுரியமும் வளர்ந்து கொண்டே போகின்றன. பகல் எனும் ஒருநேரத்தில் பாலே வனத்தைக் கடந்து போன களைப்பில் மலைத்துப் போய்த் தான் சூரியனின் ஏழ் பரித் தேர் இரவில் விசும்பில் இயங்கு வதைத் தவிர்த்துச் சந்திரனுக்கு விட்டுக் கொடுத்தது என்று கூறுகிரு.ர். ஆகாயத்தின் வெண்முகில்களும், மதியும், கருமுகில் களும், பாலைவனத்திற்கு மேலே ஒடிக் களைத்து ஆயாசத் தினுல் உதிர்த்த வியர்வைத் துளிகளே பனியாகவும், மழை யாகவும் பெய்கின்றன என்பது பரணியாசிரியரின் மற் ருெரு கற்பனை. இவ்வனத்தின் வெம்மை தங்கள் பகுதிக் கும் பரவிவிடாமல் காக்கவே தேவர்கள் வானுக்கு மேகத் திரை இட்டுக்கொண்டு அமுதவட்டம் ஆல்வட்டம் எல் லாம் எடுக்கிருர்கள் என்பதும் ஒரு கற்பனை. இருபொழுதும் இரவிபசும் புரவிவிசும் பியங்காதது இயம்பக் கேண்மின் ஒருபொழுது தரித்தன்றி ஊடுபோக் கரிதணங்கின் காடென் றன்ருே காடிதனைக் கடத்துமெனக் கருமுகிலும் வெண்மதியும் கடக்க அப்பால் ஒடியிளேத் துடல்வியர்த்த வியர்ப்பன்ருே உகுபுனலும் பணியும் அம்மா. விம்முகடு விசைவனத்தின் வெம்மையினைக் குறித்தன்ருே விண்ணுேர் விண்ணின் அம்முகடு முகிற்றிரையிட் -முதவட்டம் ஆலவட்டம் எடுப்ப தம்மா. ; : . . கருகிய காட்சிகள்: பாலே நிலத்தில் மரஞ் செடி கொடி கள் கரிந்து தீய்ந்த காட்சிகளைப் பாடும்போதும் ஆசிரிய ரின் கற்பனைத் திறம் ஒரு சிறிதும் குன்றவில்லை. .