பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தக்கால முறைப்படி தசரதச் சக்கரவர்த்தியின் மூத்த புதல்வனாகிய இராமன், முடி சூட்டி மன்னனாக இந்த உலகை பரிபாலிப்பதற்கு பதில் காடு செல்ல வைப்பதற்கு மந்தரை கைகேயியிடம் சூழ்ச்சி செய்கின்றனர். இது பகவானது இராவணா சம்ஹாரம் நடப்பதற்கு ஏதுவான திருப்பம் அல்லவா ?"

"ஆமாம் கைகேயின் து.ழ்ச்சிக்கு காரணமாக கம்பர் சொல்வது இராமன் இராவணவதத்திற்குப் போகச் செய்வதற்குத்தான் கைகேயியின் சிந்தை திரிந்தது என்று குறிப்பிடும் பொழுது, " அரக்கர் பாவமும் அல்லவை இயற்றிய அறமும் துரக்க நல் அருள் துறந்தனன் துரமொழி மடவாள்' என்ற பாட்டில் அரக்கரது பாவம்

s - = TT எனப பாடியுளனாா .

"மாகாராஜா சொல்வது மெத்த சரி". அத்துடன் இந்த கைகேயி சூழ்வினைப்படலத்தில் மிகுந்த செளகரியங்களும் சுபீட்சமும் நிறைந்த அயோத்தியை விட்டு பூரீ தேவியும் சென்றுவிட்டதால் அவளது தமக்கையான மூதேவி வந்துவிட்டது போன்று கைகேயி அலங்கோலமாகக் கிடந்தாள் என்று குறிப்பிடுவதில் இருந்தும் பூரீ இராமனது வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது என்பதையும் கம்பர் சூசகமாகச் சொல்கின்றார்." --

'மகிழ்ச்சி நன்கு சொன்னிர்கள்."

தினகர் சாஸ்திரிகளைப் பாராட்டினார்.

90