பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த சோக நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில் இஸ்லாமிய மக்கள் சந்தனக் கூடு என்ற சப்பரம் போன்ற அமைப்பை ஊர்வலமாக எடுத்துச் சென்று லஷ்மிபுரத்தில் சந்தனக் கூட்டை பிரிந்து எடுத்து புலம்பிக் கொண்டு திரும்புவார்கள்.

போர்களத்திற்குச் சென்று படுகொலையான ஹமீசைன் நினைவாக, யானை, குதிரைகள், முன்செல்ல, மக்கள் சூழ்ந்து வரும் இந்தச் சந்தனக்கூடு இராமமந்திரம் அரண்மனையைக் கடந்த செல்லும் பொழுது, தினகர் சந்தனக் கட்டை எடுத்து வரும் இஸ்லாமியப் பெருமக்களை வரவேற்று, சந்தனக்கூட்டிற்கு மல்லிகை மாலைகள், அணிவித்து தாம்பூலம் சந்தனம் வழங்குவதும், இஸ்லாமிய மதக்குரு (ஆலிம்) தினகரது நீண்ட ஆயுளுக்கும் கபிட்சமான வாழ்விற்கும் இறைவனிடம் கையேந்தி பிரார்த்தனை செய்து முடித்ததும், சிலம்ப வஸ்தாதுகளின் சந்தனக்கூடு ஆட்டத்தோடு, அங்கிருந்து செல்வது வழக்கம். சிலம்பு விளையாட்டுக்களும் சிறிது நேரம் நடக்கும். அவர்களுக்கு வேட்டி, துண்டுகளை

தினகர் வழங்குவார்.

சேதுபதிகளின் சமரச நோக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமையும் நிகழ்ச்சி இது.

ஆண்டுதோறும் நடைபெறம் இந்த அரண்மனை மரியாதையைத்தான் தினகர் தமது பணியாளுக்கு நினைவுறுத்தினார்.

<്r Pস্থাপ

I 00