பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தக் கொடிய போரின் தாக்கம் இருக்கும் பொழுது அது இராமமந்திரம் மாளிகையிலும் பிரதிபலித்ததிலும் வியப்பு இல்லை இந்தப் போரின் அங்கங்களான அவலங்கள் அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாத உணவுப் பொருட்கள், துணிமணிகள், உயிர்காக்கும் மருந்துகளின் தேவைகள் இமயமலை உச்சத்தை அடைந்தன. அரிசி, கோதுமை, மண்ணெண்ணை போன்ற பொருட்களை அரசினரது பங்கீட்டுக்கடைகளில் இருந்து பெறுவது, அரிய செயலாகிவிட்டது. ஆனால் கள்ளச்சந்தையில் எளிதாகக் கிடைக்கும் இந்தப் பொருட்களை நடுத்தர வர்க்கத்திலிருக்கும் ஏழை எளியவ்ரும் கூடுதல் பணம் கொடுத்து வாங்கமுடியாமல் திகைத்தனர். வழியறியாத மக்கள் எத்தனை நாட்கள் பட்டினிக் கொடுமையைப் பொறுமையுடன் தாங்கிக்கொள்வது ? ஒரு சிலர் இராமமந்திரம் மானிகை நோக்கிச் சென்றனர். அஞ்சேல் என்ற சொல்லும் அடையா நெடுங் கதவும் கொண்ட அந்த மாளிகை அவர்களது பசிப் பிணி தீர்க்கும் மருத்துவராக தினகர் சேதுபதி விளங்கினார். நாள்தோறும் அந்த மாளிகைக்கு வரும் ஏழை

எளியவர்களது நம்பிக்கை வீண் போகவில்லை.

இரண்டு அப்பங்களையும், இந்து மீன்ககளையும் வைத்து, தம்மை நாடி வந்த ஏராளமான மக்களுக்கு அமுது செய்து ஏக அனுப்பினார் என பைபிள் கூறுகிறதல்லவா!

ஆடல் அரசி மாதவியின் மகளான மணிமேகலை கன்னிப் பருவத்திலேயே பவுத்த பிக்குணியாக மாறி அமுத சுரபியைக் கையில் ஏந்தியவளாக பாரகம் முழுவதும் 'பசிப்பிணி அறுக எனப் பாடுபட்டதை இம்பெரும்

I 02