பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியமான மணிமேகலையில் காணப்படுகிறதல்லவா!

இப்படி எத்தனையோ வரயாற்றுச் சான்றுகள் !

ஒவாப்பசிப்பிணியை விரட்டியடிக்க !

ஏன் தினகர் சேதுபதியின் முந்தையோர் சேது நாட்டின் அதிபதிகளாக மட்டுமல்லாமல் கிழக்குக் கடற்கரையையொட்டிய சேதுமார்க்கத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட அன்ன சத்திரங்களை ஆங்காங்கு நிறுவி நலிந்தவர்களுக்கு பயணிகளுக்கும் பசிப்பிணி அகற்றிய அன்னதாதாக்களாகவும் <>/ sbво волт வரலாற்றில்

வாழ்கின்றனர்.

தினகரசேதுபதியின் இந்த பட்டினி அகற்றும் பணி தொடர்ந்தது. பழ மரத்தை நோக்கி பறந்துவரும் பறவைகளைப் போன்ற இந்த ஏழை எளிய மக்களது வாட்டத்தை கண்டு எரிச்சல் கொள்ளவில்லை.

ஏமாற்றமடையவும் செய்யவில்லை.

ராஜா தினகர சேதுபதியின் பணி தொடர்ந்தது. ஏழை எளிய மக்கள் அங்கு வயிறார உண்டு சென்றனர். மகாராஜன் நீடுழி வாழ வேண்டும் என வாழ்த்துக்கறிச் சென்றார்.

நூற்றாண்டுகள் காலமாக மறவர் சீமையின் மக்களது நலனைக் காத்த சேது மன்னர்களது கொற்றத்தையும் குடிப்பெருமையையும் காத்து பேணி நின்ற பண்பாளராக

அவர் விளங்கினார்.

I 03