பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லல்படும் மக்களுக்கு உணவும் பொருளும் வழங்கும் உத்தமராக விளங்கிய அவரது வாழ்க்கையில் ஆத்ம திருப்தி துலங்கியது.

என்றாலும், வாழ்க்கை என்பது எப்பொழுதும் கொந்தளித்து துங்கும் நுரையுமாக வரும் கங்கையின் நதி பிரவாகமாக அமைந்து விளங்குவதில்லை. பெரும்பாலும் குறுமனல் கொழித்து குழிகளை நிறைத்து கரைகளைக் கூட தொட்டுச் செல்லமுடியாது. ஆற்றுப்படுகையின் குறுகிய வாய்க்களாக விளங்கும் வையைப் போன்று தான் அமைந்து விடுகிறது. பற்றாக்குறை, இந்த உண்மையை நன்கு அறிந்த தினகரசேதுபதி பொறுமையுடனும் அவசரமில்லாமலும் இந்தப் பணியைச் சமாளித்து வந்தார்.

வைகறையில் குளியலை முடித்து தியானத்திலும் பாராயானத்திலும் நீண்ட நேரம் காலைப் பொழுதைக் கழிப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்தச் சமயங்களில் அவரது ஒளி இழந்த கண்கள் புத்தொளி பெற்றன. உடல் முழுவதும் புதிய தெம்பு முகத்தில் கோபதாபங்களை இதயம் ஒருவித இன்பமயமான லயிப்பு சித்தர்களும் பெற்ற தெய்வீக அனுபவம். மணி வாசகரது சிவபுராணத்தைச் சொல்லி முடித்து மீண்டும்.

'நமச்சிவாய வாழ்க நாதந்தாள் வாழ்க

தென்னாடுடைய சிவனே போற்றி

- == * = s * לל என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி !

என்ற தொடர்களைச் சொல்லிமுடித்ததும் அவரது காலை இறை வழிவாடு நிறைவு பெறும். ஆனால் வணக்க

I 04