பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டில் அவருக்கு கிடைக்கும் ஆன்மீக அமைதி அவரிடம் நாள் முழுவதும் நிறைந்து இருக்கும். இதனால் அவரது நடவடிக்கைகளில் ஒரு நிறைவு, அமைதி ஆகியவை நிறைந்து பொலிந்து காணப்படும்.

பணியாட்களுக்கு வேலை கொடுத்தாலும் அன்பு மகள் வசந்தத்தை அழைத்துப் பேசினாலும், அவரது பேச்சில் மென்மையும் கனிவும் மிகுந்து இருக்கும். பொதுவாக இரவும் பகலும் இராமமந்திரம் மாளிகை ஒரு ஆஸ்ரமம் போல அமைதியின் மறு வடிவாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. பறவைகளின் பரவ சகிதம், மயிலின் அகவல், குயிலின் கூவல், செம்பொத்தின் விட்டிசைக்கும் ஒலி, கிளி, காகம், சிட்டிகளின் சேர்ந்திசை - ஜலதரங்கம் போல கூட்டு இசையாக ஒலித்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழல் மிகவும் விரும்பிய தினகரது உள்ளத்தில் ஒரு வித இனிமையை நிறைத்தது.

சில சமயங்களில், இவைகளிலும் நிறைவு கொள்ளாத அவரது நெஞ்சம், மனித உணர்வுகளை நெதிழவைக்கும் இசையைத் நாடி ஒடும் அவளது அன்பு மகள் வசந்தம் தந்தையின் ஆசையை நிறைவேற்ற அவளது வயலினை அல்லது வினையை எடுத்து வந்து தந்தையின் முன் அமர்ந்து இசைச்சுருதியை மீட்டுவாள். அந்தப் பிஞ்சு விரல்களில் மந்திர சக்தியல்லவா பொருந்தி இருந்தன. சிறுமி வசந்தத்தின் இடது கை விரல்கள் மென்மையாக வினை யின் தந்திகளை மென்மையாகத் தொட்டுத்தடவியதுடன் மோடி வித்தையால் கட்டுண்டது. போல தந்திகள் நாதம் எழுப்பின. அல்ல கிள்ளைகளின்

I 05