பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பு மொழி போல செவிகளில் நுழைந்து சிந்தையில் கலந்து ஒரு விந்தையான இன்ப உணர்வுகளைச் சங்கமிக்கச் செய்தன. மகிழ்ச்சி பொங்கி வழிந்தன. இசை மேதையான தினகர் தேனையும் தெவிட்டாத அமுதத்தையும் மாந்தி மகிழ்ந்தது போல "சபாஷ்” என்ற சொல்லி தனது பெரிய தலையை மெதுவாக அசைத்து அன்பு மகளின் அரிய தேர்ச்சிக்குப் பாராட்டு தெரிவிப்பார்.

"வேறு ராகம் வாசிக்கவா ” என்று மகள் கேட்டால், "இல்லையம்மா இதுவே திவ்யமாக இருக்கிறது. அப்பழுக்கில்லாத இந்த வீணை இசையைத்தவறாம்ல் அப்பியாசம் செய்துவா ! இன்னும் சிறப்பாக வாசிக்க

לר

முடியும் !

r r 1.

ה நல்லது டாடி

அன்று வைகறையில் குளியல் அறையில் இருந்து வந்த தினகர் உறாலில் சோபாவில் அமர்ந்து துண்டினால் அவரது தலையில் உள்ள ஈரத்தைத் துடைத்துக் கொண்டிருந்தார். அவரது தலைக்குமேல் தொங்கிக்கொண்டிருந்த மின்காற்றறாடியைப் பணியாள் சுழலச்செய்தார். மெல்லிய காற்று அந்தக்கூடம் முழுவதும் சூழ்ந்து சுற்றிச்சுற்றி வந்தது. ஆனால் அவரது உடலிலும் முகத்திலும் வியர்வை அரும்பி வழிந்தது. அவருக்கே ஆச்சரியமாக இருந்தது.

'என்ன இன்று இப்படி வியர்த்துக் கொட்டுகிறது! எங்கே நாச்சியார்”

I 0.6