பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமையனரான பாஸ்கர சேதுபதி மன்னரையும் விஞ்சி நின்றவர். அருமையான இசைக்கலைஞர். வீரம் செறிந்த பொழுது போக்குகளான குதிரை ஏற்றத்திலும், துப்பாக்கியை இயக்குவதிலும் மிகுந்த திறமை பெற்றுத் திகழ்ந்தவர்.

இயற்கையாக அவர் பெற்று இருந்த புலமையையும், ஆய்வுத்திறனையும் அவைகளுக்கெல்லாம் மேலாக அவைகளை சாதாரண மக்களும் அறிந்துணர்ந்து பயனடைய வேண்டும் என்ற ஆசைப் பெருக்கையும், அவரது இலக்கியப் படைப்புகள் பறைசாற்றுவதாக உள்ளன. 'திறமான புலமையெனில் அதனை வெளிநாட்டார் வணக்கம் செய்தல் வேண்டும்” என்ற மகா கவி பாரதியின் மணிவாக்கிற்கிணங்க தினகரது தேர்ந்த முதிர்ச்சியின் வடிவாக அமைந்தன. அவரது இலக்கியப் படைப்புகள். அவரது வாழ்க்கையின் கடைசிப் * பத்தாண்டுகளில் அவர் கண்ணொளி இழந்து அவதிப்பட்ட நிலையிலும் இலக்கியப்பணி தொடர்ந்து வந்து இருப்பதைக் காணும் பொழுது அவரது இலக்கியத்தில் கொண்டுள்ள வேட்கை நம்மையெல்லாம்

வியக்க வைக்கிறது.

இதனைப் போன்றே வழிவழியாக வந்தடைந்த இசைப் புலமையையும், பியானோ, வயலின் இசைக்கருவிகளை இசைப்பதிலும் பெற்று இருந்த அற்புதத் தேர்ச்சியை தமது அருமை மகளான செல்வி. வசந்தவேணியும் பெற்றுத்திகழ வேண்டும் என்று எண்ணி அவருக்கு பயிற்சி அளித்து, முறைப்படுத்தி, நிறைவு செய்து வைத்தது, அவருக்கு இசைத்துறையில் இருந்த

I 1.5