பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமர்ந்தபெருமானே பூரீ மஹாவிஷ்ணுவே என்று சொல்லப்பட்டிருக்கிறது.

பூரீ ராமர் விஷ்ணுவாம்சமல்லவா, அவரால் ஏன் ராவணனை ஜெயிக்க முடியவில்லை ? என்று கேட்கப்படும். தசரதர் செய்த புத்திர காமேஷ்டி யாகத்திலிருந்து தோன்றிய தேவபுருஷன் பாயசத்தை தசரதருக்குப் பாலித்தார். அவர் அதில் சரி பாதியை தனது பட்ட மகிஷி கெளசல்யா தேவிக்குக் கொடுத்தார் இன்னொரு பாதியை மற்ற இரண்டு மனைவி மார்களுக்கும் கொடுத்தார். ஆதலால் ஆதித்தியன் அதாவது சூரிய மண்டலத்தின் ஹற்ருதயத்திலிருக்கிற பிரணவமே மூர்த்தீகரித்து விளங்கின பூரீ மஹாவிஷ்ணுவின் அர்த்த பாகந்தான் பூரீ ராமனாக அவதரித்தார். ஆதலால் பூரீ ராமன் தளர்ச்சியற்று ராவணனை வதைசெய்ய முடியாததை அறிந்த அகஸ்தியர் விஷ்ணுவின் பூரண பலத்தையடைய "ஆதித்திய ஹம்ருதய மந்திரத்தை’ உபதேசித்தார் அம் மந்திரத்தை மூன்று தரம் ஜபித்தபின் பூரீ ராமர் ராவன னை சம்ஹாரம் பண்ணினாரென்று

கூறப்பட்டிருக்கிறது.

ஈகரனைப் பற்றிய ஞானத்தை நமக்கு எடுத்து உரைத்ததை இரண்டாவது கிருத்தியமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, ஈசரனுடன் அரசியல்பு இவ்விதமென்று, எவ்விதத்தால் இப் பிறப்பு இறப்பு ஏற்பட்டதென்றும், இந் நிலையிலிருந்து நாம் மீளப் பட்டு அ.நித்திய சரீரத்தை விட்டு நித்திய சரீரமெடுத்து எவ்வாறு சுகமடைவோம், என்ற போதனைதான்,

ஈசனுடைய மொழியான ஞானமொழியாகும்.

73Z