பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fr - - = - = לל -

கூறுமடியார்கள் வினைதீர்த்தமுகமொன்று, என்று மூன்றாவது கிருத்தியமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது.

கர்மா என்ற விதிவியாபகமாயிருக்கும் காரணத்தால், இந்த உலகத்திற்கு “கர்மலோகம்” என்ற பெயர் விளங்கா நின்றது அவ்விதி ԼՈ ՃԱ Լ-Ր ՅՆX சொரூபங்களில் அமர்ந்திருக்கும் ஆன்மாக்களை கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது. அவ்வினையினின்றும் கடவுள் தம்மைக் கறும் அடியார்களை எவ்விதம் நிவர்த்திப்பார் ? கடவுளின் சமூகத்தில் அன்பே காரணமாய் விளங்கும், அவருடைய காருண்யமானது, தான் படைத்த ஆன்மாக்களுக்கு விதித்த வினையிலிருந்தும் எவ்விதம் நிவர்த்திக்கக்கூடும் என்ற வழியைக் கவனிப்போமேயானால் தாம் விதித்த ஆனைக்குத் தாமே பிணையாகாவிடில் ஆன்மாக்களை விதியினின்றும் எவ்விதம் நிவர்த்திக்கக்கூடும்? தாம்விதித்த ஆனை யைக் கடவுள் தாமேமறுத்துவிடுவாரா? அப்படி மறுத்துவிட்டால் சத்தியத்திற்கு என்ன மகிமை, என்ன பூஜிதை ஏற்படும் ? அதனால் ஒரு இழிவான உணர்ச்சி ஏற்படாதா ? மானிடருக்குள் சத்தியமான வாக்கை மறுத்தளித்தால் அதை இழிவாகக் கொள்ளுகின்றோமல்லவா ஆதலால் காருண்யத்தோடு விதிக்கு நிவர்த்தி தேடத் துணிந்தால் அவ்விதிக்கு அக்காருண்யமே பிணையாக வேண்டியது அவசியமென்பது தான் விவேகம் இல்லாவிட்டால் காருண்யத்திற்குப் பிரயோஜனமேயில்லை. ஆதலால் கடவுளின் காருண்யம் தாம் விதித்த விதிக்கு தம்மைத் தாமே பிணையாக்காவிடில் விதிக்குட்ப்படுத்திய ஆன்மாக்களுக்கு எவ்வித நிவர்த்தியுமில்லை.

I38