பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவ நாயனாரின் குறளில்

அன்பிலாரெல்லாந் தமக்குரியரன்புடையா ரென்புமுரியர் பிறர்க்கு.

எனக்கூறியுள்ளார். இதில் அன்புடையவரின் இலகூடினத்தைக் கூறுங்கால் அவர்கள் அன்பினால் தம் உடலையும் பிறருக்கு அற்பணம் செய்வார்கள் எனும்

பொன்மொழியை திருவள்ளுவர் கூறினார்.

இந்த நியாயத்தை தம்மிடம் அடைக்கலம் புகுந்த புறாவை, நாசம் செய்து இரையாக்க விதியைப்போல் வந்த ராஜாளிப் பட்சிக்கு அந்தப் புறாவினிடம் உண்டான அன்பின் மிகுதியால், சிபிச் சக்கரவர்த்தி நீதியினால் ஏற்பட்ட விதியைக் குறிக்கும் or துலாம்” என்ற தராசில் தமது எலும்பு உள்பட சரீரம் முழுவதையும் அப்புறாவைக் காப்பாற்ற பிணையாய் வைத்தார் உயிரை விடுத்தார் ! மோட்சமடைந்தார் !

'அரசன் அன்று கேட்பான் - தெய்வம் நின்று கேட்கும்' என்ற வசனத்தின் விவேகம் என்ன ? கடவுளுடைய ரீதியைக் குறிக்கும் துலா ராசியாகக் காட்டப் பட் ட. தராசில் கடவுளுடைய மிகுந்த காருண்யத்தை ஒரு தட்டிலும் மானிட ஜாதியின் பாவங்கள் சேரச் சேர ஒரு தட்டிலும் நிறுக்கப்படுகிறது - கடவுளின் காருண் பத்தின் அளவுக்கு மானிடர்களின் நீதி பொருத்திருக்கும். ஒரு அணுவளவேனும் பாவமானது கடவுளின் காருண்யத்தைக் காட்டிலும் அதிகரிக்குமேயானால், நீதி விடுபட்டு, உடனே உற்பாதமான சிசைஷ்யே உண்டாகும் ஆதலால்த்தான்

"தெய்வம் நின்று கேட்கும்” என்றார்.

I39