பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனாயிருந்த சிபிச் சக்கரவர்த்தி ஒரு உயிருக்காக தம்முடைய அன்பை சோதிக்கப்பெற்று தான் ஆத்மசாபல்யமடைந்தார். ஆனால், உலகத்திற்கு வந்த நாசத்தை நிவர்த்திக்க ஒர் மனிதன் தன்னுயிரை பிணையாக்கினால் நாசத்திலிருந்து காப்பாற்ற முடியுமா? கடவுளே தான் தமது நீதிக்குப் பிணையாக வேண்டும்.

இக் கலியுகத்தில் சுமார் 2000 வருடங்களுக்கு முன் மானிட ஜாதியின் பாவங்கள் மென்மேலும் அதிகரித்த சமயத்தில் இந்தக் கர்ம உலகத்தையே நாசஞ்செய்ய கடவுளின் நீதியானது. கடவுளின் காருண்யத்தை மீற எத்தனித்த பொழுது, பிரணவ சொரூபியாயும், விஷ்ணுவென்ற நாமத்தைத் தரித்தவராயுமுள்ள குமார்க் கடவுள், உலகத்தைக் காப்பாற்றும் பொருட்டு ரீதியின் சிகூைடிக்கு நானே உடன்படுவேன் பினையாவேன் !

பலியாவேன். ! என்று சபதம் செய்தார்.

இதை ஜோதிட சாஸ்திரத்தில் சித்திர ரூபமாய் 12 இராசிகளில் காட்டியிருப்பதைக் கவனித்துப்பாருங்கள். கடவுளுடைய பராக்கிரமத்தையும், கோபத்தையும், சிம்மராசியின் சித்திரத்தில் காட்டியிருக்கின்றது. அதே திரிகோணத்தின் மூலையில் அக்கோபத்தாலெழும்பிய நாசத்தை, தனுர் ராசியின் சித்திரத்தில் அம்பு பூட்டப்பட்டு சந்தானம் செய்து வளைந்து நிற்கும்

வில்லைப் பார்த்துக் கொள்ளவும்.

பாதி குதிரை உடலாகவும் பாதி புருவடி உடலாகவுமுள்ள ஒருவன் கையில் வில்லையும் அம்பையும் தோன்றச் செய்திருக்கிறது. குதிரை உடலாகக் காட்டியதின் குறிப்பு என்னவென்றால் நாசம் அதி வேகமாய் ச் சம்பவிக்கும் நிலைமையைக் காட்டியிருக்கிறது. ஆனால்

140