பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த பணிகளை குதிரையில் வந்த திவான் தினகர் பார்வையிட்டு ஒப்புதல் அளித்தார். இதனைப்போன்றே, இராமநாதபுரம் துணைக் கலெக்டர் அலுவலகத்திற்கு அண்மையில் உள்ள லேத்தம்ஸ் மாளிகையும் செப்பனிட்டு அலங்காரம் செய்யப்பட்டன. மாளிகையைச் சுற்றி உள்ள பரந்த வெயிலில் புதுவிதமான பூச்செடிச் சட்டிகளுடன்

கானப்பட்டன.

இவ்வளவு ஏற்பாடும் எதற்காக ?

அப்பொழுது சென்னை மாநில கவர்னராக இருந்த கோவடின் துரை இராமேஸ்வரம் செல்லும் வழியில் இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதியின் வேண்டுகோளுக்கு இணங்க இராமநாதபுரம் நகருக்கு கவர்னர் வருவதையொட்டி இவ்வளவு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன.

பைந்தமிழ்க்காவலர் பாஸ்கர சேதுபதியின் மைந்தர் தான் ராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி. தமிழில் ஆழ்ந்த புலமையும் ஈடாக ஆங்கில மொழியில் எழுதவும் பேசவும் சிறப்பான தகுதி பெற்று இருந்தார். கி.பி. 1973 முதல் மதுரையில் உள்ள தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் இராமநாதபுரம் டிஸ்டிரிக்ட் போர்டு தலைவராகவும் பணியாற்றி வந்தார். அந்தக்காலத்தில் ஆந்திரம், கன்னடம், கேரளம் உள்ளிட்ட சென்னை மாநில கவுன்சிலில் ஜமீன்தார்களுக்கான பிரதிநிதியாகவும் அங்கம் வகித்து வந்தார்.