பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவரது அறிவார்ந்த பணிகளையும் ஆற்றல் மிக்க செயல்பாடுகளையும் அறிந்து இருந்த கவர்னர் சேதுபதி மன்னரது விருப்பத்தை ஏற்று 23-7-1926 ஆண்டு தமது மனைவியுடன் இராமநாதபுரம் வருகை தந்தார். அன்று முற்பகலில், சிறப்பு ரயில் மூலம் இராமநாதபுரம் ரயில் நிலையம் வந்து சேர்ந்த கவர்னர் தம்பதிகளை, சேதுபதி மன்னரும், திவான் தினகரும் சிவப்பு கம்பள வரவேற்பும் அளித்து வரவேற்றனர். ஊர்வலமாக இராமநாதபுரம் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இராமலிங்க விலாசம் அரண்மனையில் மன்னரது உறவினர்களும் நண்பர்களும் குழுமி இருந்த சிறப்புப் பேரவையில் கவர்னருக்கு வரவேற்புக் கூறி அன்பளிப்புப்

பொருள்களை வழங்கினார்.

அடுத்து, மன்னரது சிறிய தந்தையும், இராமநாதபுரம் சமஸ்தான திவானாக இருந்த தினகர் சேதுபதி, கவர்னருக்கு சிவப்பு அட்டைக்குள் அமைந்த ஆங்கில நூல் ஒன்றை கவர்னருக்கு தமது சொந்த அன்பளிப்பாக வழங்கினார். நல்ல வளவளப்பான ஆர்ட் காகிதத்தில் அச்சிடப்பட்ட و /ٹٹگےi; تو நூலைப் பெற்றுக்கொண்ட கவர்னர் திவான் தினகர சேதுபதிக்கு நன்றி தெரிவித்துவிட்டு அந்த நூலின் சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்ததும் மிகவும் வியப்படைந்தார். தமிழகத்தின் மிகவும் பிற்ப்பட்ட பகுதியான மறவர் சீமை என்று வழங்கப்பெறும் இராமநாதபுரம் ஜில்லாவில் இப்படியொரு ஆங்கிலக் கவிஞரா? இங்கிலாந்து நாட்டு வெடில்லி, கீட்ஸ், வில்லியம் கூப்பர், வர்ட்ஸ்வொர்த்

கவிஞர்கள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய புலமை

47