பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன்ன அற்புதமான வரிகள்! பெரும்புலவர்களான வேடிக்ஸ்பியர், மில்டன் ஆகியோரது அரிய சிந்தனைகளின் மறு உருவாகவல்லவா அவை அமைந்து இருக்கின்றன.

கவர்னர் அடைந்த மட்டற்ற மகிழ்ச்சி அவரது

வார்த்தைகளாக வெளிப்பட்டன.

கவர்னரது அரண்மனை வரவேற்பில் கலந்து கொள்ள அங்கு குடியிருந்த மக்களும் மன்னர் முத்துராமலிங்க சேதுபதியும், மகிழ்ச்சியினால் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த உலகின் இந்துபெரும் நிலக் கூறுகளில் ஒன்று ஆப்பிரிக்க கண்டம். வடக்கே மத்திய தரைக்கடலும், மேற்கே பசிபிக் பெருங்கடலும், தெற்கிலும், கிழக்கிலும் இந்தியப் பெருங்கடலும் சூழ்ந்த மிகப்பெரிய தீப கற்பம். வடக்கே பெரும் பகுதி பாலை நிலமாக அமைந்து காணப்படுவது மத்திய தென்பகுதியில் நீக்ரோ இனத்தவரான பலபிரிவு மக்கள் நிறைந்து வாழும் நாட்டில் இயற்கை வளங்களைக் கொள்ளை கொண்டு செல்வதற்காக முதலில் போர்த்துகீசியர்களும் பின்னர் டச்சு பிரஞ்சு நாட்டவரும் இங்கே புகுந்து இந்த நாட்டில் பலபகுதிகளை தத்தமது நாட்டின் உடமைகளாக குடியேற்றப்பகுதிகளாக மாற்றினர். இந்த பரங்கிகளைத் தொடர்ந்து, பத்தொன்பதாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் கி.பி. 1806 -ல் கேப் பகுதியில் நுழைந்து இந்த நாட்டின் தென்கிழக்குப் பகுதியை ஆங்கிலேயர் வன்முறையில் மாற்றினர். இந்தப் பகுதியை ஒட்டிய ஜுலு, போயர் இனமக்கள் வாழும் பகுதிகளை கி.பி. 1816ல் டச்கக்காரர்களிடமிருந்து அறுபது லட்சம் பவுன்

48