பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்டர்லிங் தொகைக்கு கிரையம் பெற்றனர். ஆங்கிலக்கல்வி, நாகரிகம், பண்பாடு, ஆங்கிலமொழி, நிர்வாகம் ஆங்கிலச் சட்டதிட்டங்களைப் புகுத்தினர். இந்தப்பகுதிதான் இன்று தென் ஆப்பிரிக்க குடியரசு என்ற பெயருடன் செயல்பட்டு வருகிறது.

ஆனால் கி.பி. 19 ஆம் நூற்றாண்டு பகுதியில் ஆட்சியாளராக விளங்கிய ஆங்கிலேயர்களை எதிர்த்து போயர் எனப்படும் தென்னாப்பிரிக்க இனத்தவர் கலகக்கொடி உயர்த்தினர். பல இடங்களில் பல மாதங்கள் போர். அப்பொழுது தென்னாப்பிரிக்காவில் வழக்குரைஞராகப் பணியாற்றிய காந்தியடிகள் இந்த போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி அளிக்கும் தொண்டர்படையில் பணியாற்றினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த ஆங்கில போயர் போரில், போர்ப்பயிற்சியும் ஆயுத வசதியும் இல்லாத அந்நிய எதிர்ப்பு உத்வேகத்தில் போராடிய போயர் மக்கள் தோல்வி அடைந்தனர்.

இந்தப் போரில் ஆங்கில வீரர்கள் காட்டிய திரத்தையும் தங்களது நாட்டு நலனுக்காக போராடி தியாகிகளான வீரர்களது தியாகமும் தினகர சேதுபதியின் உள்ளத்தை மிகவும் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சிகளை ஆங்கிலக் கவிதையில் வடித்த தினகரர், இந்தச்சிறு கவிதை நூலாக்கி அச்சிட்டு, இராமநாதபுரம் வந்த கவர்னர் கோஷன் பிரபுவுக்கு அன்பளிப்பாக வழங்கினார். ஒரு பொருத்தமான நினைவுப் பரிசாக இருந்தது. ஆங்கில அரசாங்கத்தின் உயர்பதவியான மாநில

49