பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிலாந்து நாட்டு கிளாக்லோ யார்க்ளலயர் ஆலைகளில் அன்னத்தின் துரவியை விட மிக மெல்லிய துணியாகத் தாயரிக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பெற்று மக்களிடம் விற்கப்பட்டன, இங்கு கிடைக்கும் இரும்புத் தாதுக்கள் கப்பலேறி இங்கிலாந்து நாட்டு வெடிப்பீல்டு பர்மிங் உறாம் நகரத் தொழிற்சாலையில் வார்க்கப்பட்ட இரும்புச் சாமான்களாக இங்கு கொண்டு வரப்பட்டன. இன்னும் கண்டங்கத்திரி செடியும், ஆடாதொடைப் பூக்களும் வெடிங்க்டன் மருத்துவக் கூடத்தில் மாற்றப் பெற்று அலோபதி மருந்தகளாக இங்கு விற்கப்பட்டன.

மலிவாகவும் எளிதாகவும் கிடைத்த இந்தப்பொருட்களை மக்கள் பயன்படுத்தி வந்ததில் வியப்பு இல்லை. இந்தப் பொருட்களைக் கொண்டு இந்த நாட்டில் ஆலைகளும் தொழிற்சாலைகளும் அமைத்து குடிசைப் பொருட்கைைள இங்கு உற்பத்தி செய்தால் என்ன பொருட்களின் விலையில் இன்னும் குறைவு இருக்கும் அல்லவா ? ஆம் அப்படியானால் இங்கிலாந்து நாட்டு தொழிலாளிக்கு மாதம் முழுவதும் வேலையும் கூலியும் கிடைக்காதே ஆங்கிலேயர்களால் ஆளப்படும் இந்த அடிமை நாட்டு மக்கள் வேலையில்லாமல் பட்டினி கிடந்து சாவதைப் பற்றி ஆங்கிலேயருக்கு கவலையில்லை. பொருள் வசதி படைத்த பிரமுகர்களும் இதைப் பற்றி சிந்திக்கவில்லை அவர்களுக்கு அப்பொழுது உரிய விழிப்புணர்வும் இல்லை.

இத்தகைய சூழ்நிலையில் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் குடும்பத்தினர் சில திட்டங்களை முன்னோடியாக

நடை முறைப்படுத்த முயன்றனர். மன்னர் பாஸ்கர

57