பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதியின் உடன் பிறவாத தமையனாரான வள்ளல் பாண்டித்துரைத்தேவர் அவர்களும் துரத்துக்குடி சேதபக்தரான வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களும் இணைந்து கி.பி. 1906ல் சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். துரத்துக்குடி துறைமுகத்திற்கும்.இலங்கை,கொழும்பு துறைமுகத்திற்கும் இடையில் பயணிகள், சாமான்கள் போக்குவரத்திற்காக இந்த நிறுவனத்தின் பங்குகளை சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய்களுக்கு வள்ளல் பாண்டித்துரைத் தேவர் வாங்கியதுடன் அந்த நிறுவனத்தின் தலைவராகவும்

பணியாற்றினார்

பாஸ்கர சேதுபதி மன்னரின் புதல்வரான ராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் கி.பி.1918ல் மதுரைக்கு கொடைக்கானலுக்கும் இடையில் மோட்டார் வாகனம் முலம் பயணிகளையும் , தபால்களையும் அனுப்பி வைக்கும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார் .

இவர்களைப் போல , நமது தினகர் அவர்களும் ஒரு புதிய வணிக முயற்சியை மேற்கொண்டார். இராமநாதபுரம் சமஸ்தானத்தின் கிழக்குப்பகுதி என்பது யாவரும் அறிந்ததொன்று. இந்த சமயத்தில் மக்களில் பெரும்பாயோர் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக கடல் தொழிலை நம்பி வாழ்பவர்கள். இந்த மக்களின் மிகப் பெரும்பான்மையோர் மீனை உணவாகக் கொள்பவர்கள் இவர்களுக்கு நாள்தோறும் கடலில் பிடிக்கப்படும் மீன்கள் சில மணி நேரங்களில் கெட்டுப் போய்விடும், ருசியும் மாறிவிடும். இந்தக் குறைப்பாடுகளைத் தவிர்க்க,

58