பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளிர் பதனத்திற்கு உதவும் இஸ்(பனிக்கட்டிகளைத்) தயாரித்தால் என்ன என்ற சிந்தனை தினகருக்கு ஏற்பட்டது .

சில மாதங்களில் இங்கிலாந்து நாட்டில் இருந்து இந்த தொழிற்சாலை அமைப்பதற்கான இயந்திரங்கள் இராமமந்திரம் அரண்மனைக்கு வந்து சேர்ந்தன. இன்றைக்கு எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் இராமநாதபுரத்தில் பனிக் கட்டிகளும் தயாரிக்கப்பட்டன. ஆனால் மீன் வணிகத்தின் ஈடுபட்டு வந்தவர்களிடம். பொதுமக்களிடமிருந்தும் பனிக்கட்டிகளைப் போதுமான அளவில் கொள்முதல் செய்து பயன்படுத்தும் மன ட் பான்மை ஏற்படவில்லை. இராமமந்திரம் அரண்மனையின் முந்தைய நுழைவாயிலை ஒட்டி அமைக்கப்பட்ட சிறிய இந்த தொழிற்சாலையும் அதனை ஒட்டிய மனையையும் கத்தோலிக்க திருச்சபையினரின் தொடக்கப் பள்ளி ஒன்று தொடங்குவதற்காக மன்னர் பின்னர் அன்பளிப்பாக வழங்கினார். இப்பொழுது இந்தப் பள்ளி மாணவர்கள் பயிலும் ஆர்.சி. தினகர் நடுநிலைப்பள்ளியாக இயங்கி வருகிறது என்பதும் ஆயிரத்திற்கும் கூடுதலான மாணவர்கள் இந்தப் பள்ளியில் பயின்று வருகின்றார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மக்களிடையே தொழில் வாணிபம் பற்றிய விழிப்புணர்வு வளராத நிலையில் தினகர் இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்த முன்னோடி மனிதராக விளங்குகிறார் என்பது தான் அவரது இந்த முயற்சி நமக்கு நினைவுறுத்துகிறது. இன்னும் இதே இராமநாதபுரம் மாவட்ட கிழக்கு கடற்கரையில் தொண்டி,

59