பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்டபம், பாம்பன், இராமேஸ்வரம், ஆகிய ஊர்களிலும், இராமநாதபுரத்திலும் பல பனிக்கட்டிகள் தயாரித்து வரும் தொழிற்சாலைகள் இயங்கி வருவதுடன் மண்டபம் நகரில் மட்டும் பத்துக்கும் மிகுதியுள்ள தொழில் நிலையங்களில் இரால் மீன்கள் சுத்தம் செய்யப்பட்டு பனிக்கட்டியில் அடைத்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் தொழில் மும்முரமாக நடந்து வருகின்றன. பலகோடி ரூபாய் அன்னிய நாணயச் செலாவணி அரசுக்கு கிடைக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்னொரு முயற்சியிலும் தினகரர் ஈடுபட்டார். சொந்த நலனுக்கு அல்லாமல் பொது நோக்குடன் இராமநாதபுரம் நகரை அழகுபடுத்த வேண்டும் என்ற இலக்கினைக் கொண்டது இந்தத்திட்டம். இராமநாதபுரம் கோட்டைப்பகுதியில் பாழடைந்து போய்க்கிடந்த அகழிப் பகுதியை மூடிக் குடியிருப்புப் பகுதியாக மாற்றுவது. மக்களுக்குப் பயன்படும் இந்த திட்டத்தினால் ஊரில் பொதுவான தோற்றம், அழகும், பொலிவும், மிக்கதாக விளங்க ஏதுவாக இருக்கும் அல்லவா? நகரில் விரிவாக்கம் திட்டமிட்ட வகையில் ஏற்படும் என்பதும் அவரது முடிவு.

முந்தைய காலங்களில் இராமநாதபுரம் என்று குறிப்பிட்டால் அது இராமநாதபுரம் கோட்டையின் உட்பகுதியான சேதுபதி மன்னரது அரண்மனை, அரண்மனையில் பணியாற்றும் அலுவலர்கள், மற்றும் காதண்டராமசாமி, சொக்கநாதசுவாமி ஆலயங்களைச்

சேர்ந்த குருக்கம், திருப்பணியாற்றும் இருப்பிடங்களைக்

60