பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்ட குடியிருப்பு புகுதியை மட்டும் குறிப்பாக இருந்நது. அதாவது இன்றைய கடை வீதியில் உள்ள கோட்டைவாசல் பிள்ளையார்கோவிலில் இருந்து மேற்கே நொச்சிவயல் ஊரணி வரையான பகுதி இராமநாதபுரம் கோட்டைப்பகுதியாகும். இந்த கோட்டையை ரகுநாத கிழவன் சேதுபதி வலிமைமிக்க கற்கோட்டையாக கி.பி.168085ல் அமைத்தார். அடுத்த கி.பி.1702ல் மதுரை ராணி மங்கம்மாளது படைகளில் முற்றுகையின் பொழுதும் கி.பி.1772ல் ஆற்காட்டு நவாப் பின் படைகளும் முற்றுகையின் பொழுதும் கிழக்கிந்திய படைகளும் இணைந்து நடத்திய முன்று நாள் போரிலும் இந்தக் கோட்டை மிகவும் சேதமுற்றது. இந்நிலையில் கி.பி.17991801ல் இராமநாதபுரம் சீமையிலும் சிவகங்கைச் சிமையிலும் ஆங்கில அரசாங்கத்திற்கு எதிராக எழுந்த மக்கள் கிளர்ச்சிகளை அடக்கி ஒடுக்குவதில் ஆங்கிலேயர் மிகவும் சிரமப்பட்ட காரணத்தினால், மீண்டும் அத்தகைய கலகநிலை ஏற்படுவதைத் காரணத்தினால், மீண்டும் அத்தகைய கலகநிலை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக தமிழ் நாட்டில் உள்ள கோட்டைகளையும் அரண்மனை அழித்துவிடும்படி கி.பி.1803, 1804ல் சென்னை கவர்னர் ஆனை பிறப்பித்தார். இதனால் இராமநாதபுரம் கோட்டை மதிலும் அலங்கங்களும் இடித்து அழிக்கப்பட்டன. இராமநாதபுரம் கோட்டையின் வடக்கு. கிழக்கு பகுதிகளில் இந்த அழிபாடுகளும் அகழிப் பகுதிகளும் கோரத் தோற்றத்துடன் விளங்கின.

இந்தப்பகுதிகளைத்தான் மக்கள் தினகர் குடியிருப்பு பகுதியாக மாற்றத்திட்டமிட்டனர். இந்தத்திட்டம் முழுமையான வெற்றி பெற்றது. மக்கள் ஒரு சிறிய

61