பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகையை இராமநாதபுரம் சமஸ்தான பொக்கிசத்தில் செலுத்திவிட்டு வீடுகள் கட்டிக்கொள்வதற்கு மனை ஒதுக்கீடு ஆணையை இராமநாதபுரம் சமஸ்தான திவான் தினகரிடமிருந்து பெற்று இந்த மனைகளில் வீடுகளை அமைத்தனர். இதனால் இராமநாதபுரம் கோட்டைப்பகுதி, நீலகண்டி அக்ரஹாரம், யானைக்கல் வடக்குத் தெரு, அலங்கச்சேரி தெரு, மாரியம்மன் கோவில் தெரு, கோழிக்கிடங்குத் தெரு, வண்டிக்காரத் தெரு, சிகில் ராஜவிதி, சாலைத் தெரு, காதர் பள்ளிவாசல் தெரு என்ற புதிய குடியிருப்புகள் பகுதிகளுடன் இராமநாதபுரம் நகரம் விரிவடைந்தது.

பலநூற்றாண்டுகளாக , சேதுபதி மன்னரது பணியில் இருந்த கொல்லர், தச்சர், தட்டர், தையல்காரர், கட்டிகர்ரர், குயவர், கட்டுமானத் தொழிலாளர்கள், அரிப்புக்காரர், சாயக்காரர், என்ற பணியாளர்கள் இராமநாதபுரம் கோட்டைக்கு வெளியே கிழக்கில் ஒருகல் தொலைவில் தனிக்குடியிருப்பாக அமைத்து வாழ்ந்து வந்தனர். அந்தப்பகுதி வெளிப்பட்டணம் என்று வழங்கப் பட்டது. திவான்தினகரது திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதால், இராமநாதபுரம்கோட்டைப்பகுதியும் வெளிப்பட்டணமும் இணைத்த பெருநகரமாக மாற்றம் பெறுவதற்கு வழி ஏற்பட்டது.

இந்த் திட்டத்தை நடைமுறைப்

படுத்தப்பட்டதினால் தினகர் ஒரு சிறந்த நிர்வாகி என்பது மட்டுமல்லாமல், ஒரு நல்ல முன்னோடி மனிதர்

என்பதையும் வரலாறு உறுதிப்படுத்துகிறது.

茂系

62