பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயிலின் அகவுதலும் அந்த மழலைக் குரலின் இன்பத்தைத் தரவில்லையே

குறு குறு நடந்து, சிறு கை நீட்டி, இட்டும் தொட்டும் து.ழந்தும், கவ்வியும், நெய்யுடை அடி சில், உடம்பு எல்லாம் பட்டு வழியுமாறு குழப்பிக் கொண்டு திரியும் சின்னஞ்சிறு குழந்தை தரும் கொள்ளை இன்பத்திற்கு ஈடு எது அதனால் தான் இன்பக் கதைகள் எல்லாம் உன்ைைப்போல ஏடுகள் சொல்வதுண்டோ என ஒரு

கவிஞர் பாடினார்.

மனித குலத்தை அன்பு, பாசம், பற்று, வாஞ்சை என்ற இணைப்புகளைக் கொண்டு வளர்ச்சி பெறச் செய்யும் இந்தக்குழந்தைக்காக தினகர் பல ஆண்டுகளாக ஏங்கிக் கொண்டு இருந்தார் . மேலும் சில ஆண்டுகளாக அவரது கவலையும், தவிப்பும் தொடர்ந்து இறுதியில் அவருக்கு கிடைத்தது ஒரு பெண் குழந்தை.

அதனை ஆண்டவனது அருட்பிரசாதமாகத்தான் அவர் எண்ணினார். அவரது கனவு நிறைவு பெற்றது

ஒல்லியான உடல், சற்று நீண்ட வட்ட முகத்தில் பளிச்சிடும் கருவிழிககள் , அழகிய வாய் , நாள் முழுவதும் அந்தக்குழந்தையைப் பாசமுடன் பார்த்துக் கொண்டிருப்பதே அவரது பொழுது போக்காக அமைந்தது. வறட்சி போல அவரது வாழ்வில் கவலையும் விரக்தியும், வளர்ந்து கொண்டு இருந்த பொழுது, அவரது வாழ்க்கையை இன்பமும், மகிழ்ச்சியும் பொங்க எழிலுடன் வந்த வசந்தமல்லவா அந்தக் குழந்தை !

64