பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதனால் அந்தக் குழந்தைக்கு வசந்த வேணி எனப்பெயரிட்டு அழைத்தார். இந்து வயதை எய்திய அந்தக் குழந்தைக்கு ஆங்கில செவிலியரை அமர்த்தி, ஆங்கில பாணியில் உடை உடுத்த, உணவுக்கூடத்தில் அமர்ந்து உணவு உண்ண, பழக்கப் படுத்தப்பட்டதுடன், ஆங்கில மொழியையும், பண்பாட்டையும் , சிறிது சிறிதாக அந்தச் செவிலியர் குழந்தை வசந்தாவிற்கு கற்றுக் கொடுத்து வந்தார். அடுத்து ஆங்கிலக்கல்வியை போதிக்க ஆங்கில ஆசானும் நியமிக்கப்பட்டார் .

அழகிய கவுன், உடுத்தி பூட்சும், சாக்கம் அணிந்து தலையை மேனாட்டுப் பாணியில் வாரி வண்ண ரிப்பன்களை அணிந்த அந்தக் குழந்தை மிடுக்காக நடந்து

வந்து ,

"டாடி ஹவ் டு யூ டு எனத் தந்தையை வினவும் பொழுது அப்படியே உச்சிகுளிர மகிழ்ந்து போவார்.

"ஹவ் டு யூ டு ” என அவரும் மகிழ்ச்சியுடன் சொல்லிவிட்டு அப்படியே வசந்தத்தை வாரி எடுத்து முத்தமிடுவார்.

சிறுமி வசந்தம் ஆங்கிலமும் பிற பாடங்களும் கற்றுக் கொள்ள ஆசிரியர் இருவர் நியமனம் பெற்று இருந்தனர். மேலும் நேரம் தவறாமல் காலையிலும் மாலையிலும் கண்காணித்து, நீராட்டி, பல வகையான ஆயத்த ஆடைகளை அணிவிக்கவும், தலைவாரி, ரிப்பன் பினைத்து

கால்களில் வண்ண வண்ண காலணிகளைப் பூட்டி

65