பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலங்காரம் செய்வதற்கும் ஆங்கிலம் அறிந்த இருதாதியரும் இருந்தனர் .

வசந்தத்திற்கு தேவையான ஆயத்த ஆடைகள், அலங்காரப் பொருட்களும் இங்கிலாந்திலிருந்து மாதந்தோறும் வரவழக்கப்பட்டன. ஏற்கனவே, இராம மந்திரம் மாளிகைக்கும் தினகருக்கும் தேவையான அணிமணிகள், வாசனைப்பொருட்கள், கண்ணாடி, கண்ணாடி பீங்கான், சிகிரெட், பிஸ்கட், ஆகிய பொருட்கள் பட்டியலை ஒவ்வொரு மாதமும் முன்கட்டியே தாயரித்து சென்னையில் உள்ள ஸ்பென்ஸர் கம்பெனிக்கு அனுப்பி வைப்பதற்கும், அந்தப் பொருட்கள் அங்கிருந்து பெற்று வருவதற்கும் ஒரு மேலாளர் தனியாகப் பணியாற்றி வந்தார். ஆதலால் வசந்தத்திற்குத் தேவையான பொருட்களையும் சேர்த்து வரவழைப்பதில்

சிரமம் எதுவும் ஏற்படவில்லை.

తాu 655Téరారాr бол са отбоот "> 6ζΣ Ι.- θE, GζΙΧ 5"Τ உடுத்திய அலங்காரத்துடன் சிறுமி மாளிகையில் இங்கும் அங்கும் புள்ளிமான் குட்டியைப் போல ஒடியாடி விளையாடித் திரிவதை கண்டு ஆனந்தம் கொள்ளும் தினகர், இராமமந்திரம் மாளிகையின் களையும் அழகுப் பொலிவும் அந்தச்சிறுமியினால் தான் ஏற்பட்டு இருப்பதாக உள்ளுர நினைத்து நினைத்து மகிழ்ச்சியடைவார். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட காலத்திற்கு நிலைக்கவில்லையே, !

அவரது அருகில் நீண்ட வளர்ந்த உயர்ந்த தேவதாரு மரங்களையும் கொன்றை மரங்களையும் பற்றி

66