பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடித்து வளரும் கொடி ரோஜா, மாதவிக் கொடி களைப் போல, மடமடவெள வளர்ந்த யுவதியான அவரது அன்பு மகள் வசந்த வேணியின் இளமைப் பொழிலையும் கலை மகளும், திருமகளும் இணைந்து இருப்பது போன்ற முகக்களையையும் கண்டு களிக்க இயலாத அவரது கண்பார்வை பறி போயிற்று அல்லவா ? என்ன செய்வது?

விதியின் சதிக்கு மாற்று . . . . .

வசந்தவேணி அவர் முன் அமர்ந்த பியானோ வாத்தியத்தையோ அல்லது வயலினை வைத்துக் கொண்டு தந்தை மகிழத் தந்திகளை மீட்டி நாத இன்பத்தைப் பொழியும் பொழுது, இந்த ஏக்ககமும் தவிப்பும் அவரது இதயத்தில் வேதனையை நிறைக்கும் . ஆனால் சில வினாடிகளிலேயே அந்த வேதனையை விட்டு இசைக் கருவி இயற்றும் இசை இன்பத்தில் முழ்கிவிடுவார்.

அவரது ஆன்மாவின் எக்களிப்பு போன்றதும் அவருக்கு பிடித்தமான பியானோ வாத்தியம் முன் அமர்ந்து வசந்தவேணி பியானோக் கட்டைகளை தனது மெல்லிய விரர்களில் அழுத்தி மந்திர உச்சாடனம் போல அந்த வாத்தியக்கருவியின் இசையை ஆரோகன அவரோகன சுரங்களில் விதம் விதமான இனிய ஒலியை எழுப்பி இதயத்தின் மூலை முடுக்குகளையெல்லாம் துழாவி வரும் இசைப் பொழிவை , அதிலும் அவரே வாசித்து மகிழும் பாணியில் அந்த பியானோ பேகம் பொழுது அவர் அடையும் களிப்பும் குது கலமும் எல்லையற்றதாக இருக்கும் . அக்பர் சக்ரவர்த்தியின் முன்னிலையில் அரசவை தான்சேன் தீபக் ராகத்தை இசைத்துப் பாடும் பொழுது அக்பர் சக்கரவர்த்திக்கு

6, 7