பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்பட்ட இன்பத் தவிப்பு போல

சில சமயங்களில் தான் கற்றுத் தேர்ந்த வயலின் வாத்தியத்தையும் வசந்த வேணி, தந்தைக்கு இசைத்துக் காண்பிப்பார். குழந்தையைத் தோளில் சாய்த்து பற்றிக் கொள்ளும் தாயைப் போல வயலின் வாத்தியத்தை தனது இடது தோளில் நெஞ்சோடு அனைத்தவாறு அதன் தந்திகளில் அதன் வில்லைக் கொண்டு மிக மென்மையாகத் தடவுவது போல அழுத்தி இசைப்பார். நவரசங்களையும் எதிரொலிக்கும் அந்தக் கருவியின் தந்திகளில் குறிப்பாக அவலச் சுவையை மிக அற்புதமாக அன்றைய வினை விற்பன்னர். தனம்மாளின் வினையின் நாதத்தில் பிறக்காத புதுமையான சோகத்தின் நிரவல் மிக நளினமாக கேட்போர் காதுகளில் விளையாடும் குற்றாலத்தின் சாரலில் நாளெல்லாம் நனைந்து நடுநடுங்கிக் கொண்டிருக்கும் குயிலின் சோகம் மிகுந்த கூவுதலில் குழைத்து வரும் துன்ப இழைகளைப் போல அந்த வீணை இசையை

கேட்போரின் இதய நாளங்களைச் சோக உணர்வு கண்டி

இழுக்கும் .

புதிய புதிய கற்பனைகளில், பிர்க்காக்களில் நளினமாகச் சஞ்சரிக்கும் பேரலைகள் எழுந்து சிற்றலைகளாக குறுகி மனத்தின் தெம்பும் ஊட்டும் மெல்லிய தென்றல் போல பரவித் தவழும் அந்த வயலின் நாதத்தின் தினகர் அப்படியே சொக்கிப் போவார். வயலின் ஒலி நின்ற பொழுது வசந்த வேணிக்கு பாராட்டுச் சொல்லி அவரை அனுப்பிய பிறகும், சிறிது நேரம் அப்படியே தான் அனுபவித்து மகிழ்ந்த மகளின் இசைத்

68