பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறமையை, அற்புதப் பயிற்சியை எண்ணி எண்ணி வியந்து போவார் .

இவ்வளவு சிறப்பாக, செம்மையாக இசைப் பியானோவையும் வயலினையும் கையாண்டு தம்மையே சொக்க வைக்கும் தமது அருமை மகளது ஆற்றலை நினைத்து நினைத்து அகமகிழும் தினகருக்கு, அவள் இசைக்கருவிகளில் கையாளும் பாங்கை, அவளது அரிய திறன் வாய்ந்த விரல்களின் இயக்கத்தை மெய்மறந்து வாசிக்கும் அவளது முக பாவத்தை கண்டு களிக்க முடியவில்லையே என்ற ஆதங்கமும் அவரது இதயத்தில் எழந்து மறையும்.

அத்துடன் இன்னொரு கவலையும் அவரது சிந்தனையில் பளிச்சிடும். இத்தகைய கலைஞானம் வாய்க்கப் பெற்ற தமது மகளை, சாதாரணமான ஜமீன்தார் ஒருவரது மனைவியாக்கி விடாமல் நல்ல கலை ரசிகனும், நற்குணம் படைத்த இளைஞனைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற உறுதியும் அவருக்கு ஏற்பட்டது. எப்படி, எங்கே யார் மூலம் தேடுவது . . . அதெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், இப்பொழுது . . . . .

மகளது திறமையை, ஊர் அறிய, உலகம் வியக்கும் s

வண்ணம் செய்ய வேண்டும். கிம்பர்லி சுரங்கத்தின்

கிடைத்த வைரமானாலும் அதனை சுத்தப்படுத்தி,

நீரோட்டம் அறிந்து பட்டை தீட்டினால் தானே.

பார்ப்பவரை மயக்கும். அழகும் , ஒளிச்சேர்க்கையும்

பெற்றுத்திகழும் ஆம் , வசந்த வேணியை இராமமந்திரம் 69