பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பராமரித்து வரவேண்டிய பொறுப்பு யூனியன் போர்டிடம் இருந்தது. அந்த அலுவலகத்தின் வரும் பொழுது தினகர் அவரது சொந்தக் குதிரையில் வந்து செல்வார். அலுவலகப் பணியை முடித்தவுடன் குதிரையில் அமர்ந்து இராமநாதபுரம் நகர் விதிகளில் வலம்வந்து மக்களது குறைபாடுகளை நேரில் கண்டு கேட்டறியும் வாய்ப்பாக இந்த உலாவை அவர் மேற்கொண்டார். அப்பொழுது மக்கள் மரியாதையுடன் தினகரரை வரவேற்று தங்களது பகுதி குறைகளைக் தயக்கமின்றி எடுத்துச் சொல்வார்கள். அவரும் அந்தக் குறைபாடுகள் பற்றி போர்டு உறுப்பினர்களுடன் கலந்து குறைபாடுகள் நிவர்த்தி பெற உதவுவார். மிகுதியான நிதி ஆதாரங்கள் தேவைப்படும் குறைபாடுகளை மதுரையில் உள்ள இராமநாதபுரம் ஜில்லா கலெக்டரை அறிக்கை மூலமும் அவசரமாக பிரச்சனைகளுக்கு நேரில் சென்றும் கலெக்டரை பேட்டிகண்டு பேசியும் தக்க ஆணைகளைப் பெற்று வருதலும் உண்டு. கி.பி.1857ல் வட மாநிலங்களின் ஏற்பட்ட சிப்பாய்களது கிளர்ச்சியை அடுத்து கும்பெனியாரது கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் மீதான மிக மோசமான ஊழல் விசாரணை போன்ற நிகழ்வுகளினால் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியாரது நிர்வாகத்தில் இருந்த இந்தியத் துணைக் கண்டத்தின் துரைத் தனத்தை இங்கிலாந்து நாட்டின் ஆங்கில அரசு ஏற்றுக்கொண்டது. இங்கிலாந்து நாட்டு அரசி விக்டோரியாவை இந்திய துணைக் கண்டத்தின் சக்கரவர்த்தினியாக அறிவிப்புச் செய்தது. தமிழ் மாநிலத்தைப் பொறுத்த வரையில் தலத்தாபன அமைப்பு போன்ற மக்கள் பிரதிநிதித்துவம் நிர்வாகத்தில் ஏற்படுமாறு சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன. தொடர்ந்து

zz