பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிமைகளும் ஜமீன்தாரிப் பகுதிகளும் இனைத்து ஜில்லாக்கள் ஏற்படுத்தப்பட்டன.

அதுவரை மதுரைச் சீமையின் அங்கமாக இருந்த இராமநாதபுரம் , சிவங்கை , ஜமீன்தாரிப் பகுதிகள் ஒரே ஜில்லாவாக அறிவிக்கப்பட்டன. இந்த ஜில்லாவின் நிர்வாக நலனை கருத்திற்கொண்டு திருநெல்வேலி சீமையின் சாத்துார், பூரீ வில்லிபுத்துார் தாலுக்காக்களும் மதுரைச்சீமையின் திருப்பத்துரர், தாலுகாவையும் புதிய இராமநாதபுரம் ஜில்லாவில் இணைத்து புதிய கலெக்டர் ஒருவரது தலைமையிடமாகக் கொண்டு கி.பி.1970ல் புதிய நிர்வாகம் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கத் தொடங்கியது. இந்தப் புதிய நிர்வாக அமைப்பில் ஏற்படும் மக்கள் பிரச்சனைகளுக்கு மதுரையில் இருந்த இராமநாதபுரம் ஜில்லா கலெக்டர் தக்க தீர்வுகளை வழங்கி வந்தார் .

இத்தகைய சூழ்நிலையில் தான் இராமநாதபுரம் சமஸ்தான திவான் என்ற முறையிலும் இராமநாதபுரம் நகர் போர்டு தலைவர் என்ற முறையிலும் இராமநாதபுரம் ஜில்லா கலெக்டரைப் பேட்டிகான ஒரு நாள் மதுரை நகருக்குச் சென்றார். ஜில்லா கலெக்டரைப் பேட்டி கண்டு இராமநாதபுரம் நகர் தேவைகளை எடுத்துக் கூறியதும் அதற்கான தீர்வு ஆணையை விரைவில் அனுப்பி வைப்பதாக கலெக்டர் தினகரிடம் சொன்னவுடன், அவர் தல்லாகுளத்திலிருந்து குருவிக்காரன் சாலைவழியாக தெப் பக்குளம் பகுதியில் உள்ள சேதுபதி மன்னர் மாளிகைக்குத் திருப்பிக்கொண்டு இருந்தார். அப்பொழுது தான் அவரது வாழ்வைக் குலைக்கும் விபத்து

78