பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிகழ்ந்தது. ஆம், விபத்து அதனை பேராபத்து என்று தான் குறிப்பிட வேண்டும்.

அப்பொழுது நல்ல உச்சிப்பொழுது திடீரென்று ஒரு சுழல் காற்றுதோன்றியது. வீதியில் கிடந்த குப்பை களம், புழுதியெல்லாம் உயிர்பெற்று எழுந்து நடனம் ஆடியது போல சுழன்றது . மிகுந்த வெப்பம் காரணமாக காற்று சூடாகி, வெம்மையினால் சுழலத் தொடங்கியது . தரையில் இருந்து ஒரு பனை உயரம் வரை கழன்று சுழன்று அடித்த புழுதிக்காற்று விரைவாக அப்படியே நகர்ந்து கொண்டே இருந்தது. குப்பைகள், கழிவுகள் துரண் போன்று எழுந்து கழன்று சென்றது. குதிரையில் இருந்த தினகரரை அந்த சுழல் கடந்து சென்றது. பேய்த் தேர் என வழங்கப்படும் இந்தக் காற்று காட்சியை ஒரு நொடி நேரம் இமை கொட்டாமல் பார்த்தார் . அதற்கு மேல் அவரால் அந்த பேய்த் தேரைப் பார்க்க இயலவில்லை. அவரது கண்களில் துரசு புகுந்து நிறைந்து விட்டது .

கண்னைக் கசக்கியவாறு தெப்பக்குளம் மாளிகை வந்து சேர்ந்தார் கண்கனைக் குளிர்ந்த நீரால் கழுவிய பிறகு கண்ணாடியில் கண்களை பார்த்தார். கோவைப் பழம் போன்று சிவந்த இடது கண்ணில் பொறுக்க முடியாத வலியும் ஏற்பட்டது.

மதுரைச் சீமையில் உள்ள மருத்துவர்கள் பலர்

வரவழைக்கப்பட்டனர் . அவர்கள் தினகரரது கண்னைப்

பரிசோதித்தனர். மூலிகைகள், மருந்து, வேது பிடித்தல்

எனப் பலவித முயற்சிகளால் கண்வலியை நீக்குவதற்கு

அவர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர். என்றாலும்

கண்ணில் வலி, உறுத்தல், கண்ணில் இருந்து நீர் வடிதல்,

79