பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகியன சற்று குறைந்தது. ஆனால் அந்தக் கண்ணில் பார்வையில்லை. சென்னையில் உள்ள நண்பர்களுக்கு தந்திகள் சென்றன. சென்னையில் இருந்து லண்டனுக்கும் செய்தி தந்தியில் பறந்தன. 56లె5T மருத்தவர் ஒருவர் ஒரு மாத காலத்தில் இராமநாதபுரத்திற்கு வந்து சேர்வதாக தகவல் கிடைத்தது. விமானப் போக்குவரத்து அரிதாக உள்ள அந்தக் காலத்தில் உடனடியாக மருத்துவர் வர வாய்ப்பு

இல்லாதநிலை.

தினகர் மதுரையில் இருந்து புறப்பட்டு இராமநாதபுரம் வந்தார். லண்டன் மருத்துவரது வருகையை எதிர்பார்த்து நம்பிக்ைைகயோடு காத்திருந்தார். மகாராஜா விரைவில் கண் பார்வை பெற பல நேர்த்திக்கடன்களை அவரது பணியாளர்கள் நிறைவேற்றினர். குறிப்பிட்ட நாள் அன்று நடுப் பகலில் சென்னையில் இருந்து தனுஷ்கோடி செல்லும் ரயில் வண்டியில் வரும் டாக்டர் துரையை அழைத்து வர இராமமந்திரத்தில் இருந்து கார் சென்றது . சிறிது நேரம் கழித்து ரயில் நிலையத்தில் இருந்து கார் திரும்பி வந்தது. நம்பிக்கை நட்சத்திரமாக எதிர்பார்க்கப்பட்ட லண்டன் டாக்டர் கைப்பெட்டியுடன் இராமமந்திரத்திற்கு வந்தார் அவரைக் கை குலுக்கி வரவேற்றார் தினகர். மருத்துவருக்கு குளிர்பானம் (ஷர்ப்த்) வழங்கப்பட்டது. பின்னர் மருத்துவரிடம் பயணம் பற்றி விசாரித்து விட்டு கண்ணில் புழுதி புகுந்த வலி ஏற்பட்ட விவரத்தையும் நாட்டு வைத்தியர்கள் மருத்துவம் செய்துள்ளதையும் தெரிவித்தார். மெளனமாக கேட்டுக் கொண்டிருந்த லண்டன் மருத்துவர், தினகரரை நாற்காலியில்

80